உதகை: கொரோனா விதிமீறிய வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
உதகையில், கொரோனா விதிகளை மீறிய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
நீலகிரி மாவட்டம் உதகையில் வணிக நிறுவனங்கள், கடைகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மெயின் பஜார், தாவரவியல் பூங்கா பகுதியில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி, முககவசம் அணிவது போன்ற விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, 50 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, ரூ.26 ஆயிரத்து 200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாத சுற்றுலா பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.