நீலகிரி: இரயில் நிலைய ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா
குன்னூர் ரயில் நிலையத்தில் பொறியியல் பிரிவில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.;
குன்னூர் ரயில் நிலையம்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் ரயில் நிலையத்தில், பொறியியல் பிரிவில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுடன் தொடர்பில் இருந்த சக ஊழியர்கள் என, இதுவரை 50 பேரிடம் இருந்து மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவு பெறப்பட்ட நிலையில், அதில் உதகை ரயில் நிலையத்தில் பணிபுரியும் 2 ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள், உதகை ரயில் நிலையத்துக்கு வந்து செல்வதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அங்கு, நோய்த்தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி மூலம் இருக்கைகள், அலுவலக பகுதிகள், நடைபாதையில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.