சம்பளம் நிலுவை: உதகையில் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்
உதகை நகராட்சியில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்டோர், நிலுவை சம்பளத்தைத்தொகையை வழங்கக்கோரி, நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
சம்பளம் வழங்கக்கோரி, உதகை நகராட்சி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், தூய்மைப்பணியாளர் ஒருவர், தரையில் படுத்து உருண்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
உதகை நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், சுமார் 170 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக, அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறி, உதகை நகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் கொடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் கூறியபோது போராட்டத்தைக் கைவிட்ட தூய்மைப் பணியாளர்கள், இன்று வரை சம்பளம் வழங்கப்படாததால் மீண்டும் இன்று அதிகாலை முதலே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி நிர்வாகமானது உடனடியாக சம்பளத்தொகையை தர வேண்டும்; தவறும்பட்சத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்., கோஷங்கள் எழுப்பி தரையில் படுத்து தர்ணா போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களால் உதகையில் பரபரப்பு ஏற்பட்டது.