உதகையில் வாக்காளர் சுருக்க முறை தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம்
வாக்காளர் சுருக்க முறை தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.;
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரும், கூடுதல் ஆணையாளருமான (நில நிர்வாகம்) ஜெயந்தி தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் எஸ்.பி. அம்ரித் முன்னிலை வகித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஜெயந்தி பேசும்போது, குன்னூர் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
2-வது முறையாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் ஆட்சேபனைகள் குறித்து கேட்டறிந்து அவைகளை நிவர்த்தி செய்வதற்காக கூட்டம் நடத்தப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது செம்மையாக வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.