மதுபோதையில் வாகனம் ஓட்டிய மதுவிலக்கு பிரிவு காவலர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மதுவிலக்கு பிரிவு காவலர் பணியிடை நீக்கம்

Update: 2021-04-30 13:57 GMT

மதுவிலக்கு பிரிவு ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ளவர் மெல்வின்.  இவர் குன்னூரில் உள்ள ஆய்வாளரை வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு  பணிக்கு அழைத்து வருவதற்காக மாலை ஊட்டியில் இருந்து குன்னூருக்கு சென்றுள்ளார்.

மெல்வின் அப்போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனம் சேதம் அடைந்தது. இதனால் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மெல்வினை மீட்டு பி1 காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும்அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படும் நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக காவலர் மெல்வினை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News