உதகையில் பெட்ரோல் விலையை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்பாட்டம்
உதகையில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து எம்எல்ஏ கணேஷ் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
உதகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து இரு சக்கர வாகனம் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
உதகை ஏடிசி திடலில் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை ஏற்றத்தால் நாட்டு மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக வும் தொடர்ந்து மத்திய அரசு இதுபோன்ற விலை ஏற்றத்தை கொண்டுவந்து மக்களை நசுக்குவதாக ஆர்ப்பாட்டம் வாயிலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ரூ.350 -லிருந்த கேஸ் சிலிண்டர் விலை தற்போது ஆயிரத்தை தாண்டி உள்ளதால் நடுத்தர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே எதிர்வரும் 2024 ஆண்டில் ஆளும் பாஜக அரசை புறக்கணித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து நாட்டில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.