நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி

நீலகிரியில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் நீலகிரி கலெக்டருக்கு தொற்று உறுதி.

Update: 2022-01-26 15:11 GMT

நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித். 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் SP அம்ரித் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாமல் அரசு உயர் அதிகாரிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மாநில வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் .

இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கோவை ESI மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இன்று நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News