உதகை பூங்காவில் மலர் கண்காட்சிக்காக நாற்று நடவு பணி துவக்கம்

நடவு செய்யப்படும்‌ மலர்‌ நாற்றுகளுக்கு பனியின்‌ தாக்கம்‌ ஏற்படாத வண்ணம்‌ கோத்தகிரி மிலார்‌ செடிகளைக்‌ கொண்டு பாதுகாப்பு செய்யப்படும்‌.

Update: 2022-01-04 09:45 GMT

மலர்‌ நாற்றுகள்‌ நடும்‌ பணியை வனத்துறை அமைச்சர்‌ ராமச்சந்திரன் மற்றும்‌ நீலகிரி கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தனர்.

உதகை அரசு தாவரவியல்‌ பூங்காவில்‌ வரும்‌ மே மாதம்‌ நடைபெற இருக்கும்‌ 124-வது மலர்‌ காட்சியை முன்னிட்டு பூங்காவின்‌ பல்வேறு பகுதிகளில்‌ பல வண்ண மலர்‌ செடிகளைக்‌ கொண்டு மலர்‌ பாத்திகளை அமைக்க ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டது. இதனை கருத்திற்கொண்டு முதற்கட்டமாக சால்வியா, டெல்பீனியம்‌ பென்ஸ்டிமன்‌ மற்றும்‌ டிஜிட்டாலிஸ்‌ போன்ற மலர்‌ நாற்றுகள்‌ நடும்‌ பணியை வனத்துறை அமைச்சர்‌ ராமச்சந்திரன் மற்றும்‌ நீலகிரி கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தனர்.

இவ்வாண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள்‌ மற்றும்‌ சுற்றுலா பயணிகளை கவரும்‌ வகையில்‌ ஜெரேனியம்‌, சைக்லமன்‌, சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரெனுன்குலஸ்‌ மற்றும்‌ பல புதிய இரக ஆர்னமென்டல்கேல்‌, ஓரியணீடல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள்‌ மற்றும்‌ இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேணீடீடப்ட்‌, பென்டாஸ்‌, பிரன்ச்‌ மேரிகோல்டு, பேண்சி, பெட்டுனியா, பிளாக்ஸ்‌, பிரிமுலா, ஜினியா, ஸ்டாக்‌, வெர்பினா, சன்பிளவர்‌, சிலோசியா, ஆன்டிரைனம்‌, வயோலா, லைமோனியம்‌, ட்யூபர்‌ பிகோனியா, அஸ்டில்மே, ரட்பெக்கியா, டொரினியா, போன்ற 275 வகையான விதைகள்‌ ஜப்பான்‌, அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும்‌, இந்தியாவின்‌ பல்வேறு மாநிலங்களிலுருந்தும்‌ பெறப்பட்டு மலர்செடிகள்‌ உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில்‌ பல்வேறு பகுதிகளில்‌ 5.5 லட்சம்‌ மலர்‌ நாற்றுகள்‌ நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

நடவு செய்யப்படும்‌ மலர்‌ நாற்றுகளுக்கு பனியின்‌ தாக்கம்‌ ஏற்படாத வண்ணம்‌ கோத்தகிரி மிலார்‌ செடிகளைக்‌ கொண்டு பாதுகாப்பு செய்யப்படும்‌. இவ்வாண்டு எதிர்வரும்‌ மலர்‌ காட்சியினையொட்டி மலர்காட்சி மாடம்‌ மற்றும்‌ கண்ணாடி மாளிகையில்‌ 35000 வண்ண மலர்‌ தொட்டி செடிகள்‌ வைக்க ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News