நீலகிரியில் கால்வாய்களை தூர்வாரும் பணி துவக்கம்

நீலகிரியில் மழை நீர் செல்லக் கூடிய அனைத்து கால்வாய்களையும் தூர் வாரும் பணியை வனத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

Update: 2021-09-20 15:27 GMT

கால்வாயை தூர்வாரும் பணியை துவக்கி வைத்த வனத்துறை அமைச்சர்.

வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டம் உதகையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் பிரதான மழை நீர் செல்லக் கூடிய கால்வாய்களை தூர்வாரும் பணியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று துவக்கி வைத்தார்.

உதகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகள் உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மூன்று கிலோமீட்டர் சிறிய கால்வாய்கள் 6.885 கிலோமீட்டர் மற்றும் சிறு பாலங்கள் 40 எண்ணிக்கைகள் உள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது பெய்யும் கனமழையின் காரணமாக நகர்ப்பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க தமிழக முதலமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கூடுதல் தலைமைச் செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர் அவர்களால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் மழைநீர் செல்லும் பிரதான கால்வாய்கள் தூர்வாரும் பணியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று துவக்கி வைத்தார் அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளைச் சார்ந்த உள்ள கால்வாய்களை தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளன என தெரிவித்தார்.

கால்வாய்களை தூர் வரும் இந்தப் பணியானது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி இன்ன சென்ட் திவ்யா, துணை ஆட்சியர் மோனிகா ரானா, நகராட்சி ஆணையர் சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர். கால்வாய் தூர்வாரும் பணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News