உதகை வாட்டர் ஏடிஎம்களில் தண்ணீர் வருவதை உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு
நீலகிரியில் கோடை சீசன் நெருங்கிய நிலையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாட்டர் ஏடிஎம்களில் தண்ணீர் கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.;
உதகை புதிய பேருந்து நிலையம் ஏடிசி பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வாட்டர் ஏடிஎம் செயல்பாடுகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், நீலகிரியில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தளமாக உள்ள காரணத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு வாட்டர் ஏடிஎம் எந்திரத்திற்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு எந்திரத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் துறை அலுவலர்கள் தேவையான குடிநீர் கிடைப்பது உறுதி செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.
நகரில் வாட்டர் ஏடிஎம்.,களில் ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.