உதகையில் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளை ஆட்சியர் ஆய்வு

உதகையில் கனமழையால் சேதமடைந்த பகுதிகளை ஆட்சியர் பொறுப்பு கீர்த்தி பிரியதர்ஷினி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-11-18 17:00 GMT

ஆய்வில் ஈடுபட்டுள்ள கலெக்டர்.

உதகையில் பெய்த கனமழையால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி உதகை படகு இல்ல சாலையில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உதகை-புதுமந்து சாலையில் ஏற்பட்ட மண்சரிவை பார்வையிட்டார். கனமழையால் சேதமடைந்த இடங்களில் சாலைகளில் விழுந்து கிடக்கும் மண், கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, தாசில்தார் தினேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News