உதகை நகராட்சி மார்க்கெட்டில் முழு தூய்மை பணி

உதகை மார்க்கெட்டில் மழை காலங்களில் தேங்கி நிற்கும் நீர் செல்லும் கால்வாயில் இருந்த சகதிகள் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டது.;

Update: 2022-02-28 11:00 GMT

உதகை நகராட்சி மார்க்கெட்டில் 1,300 கடைகள் உள்ளன. பருவமழை காலங்களில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்படும். இதனால் கடைகளை சுற்றிலும் வெள்ளம் தேங்கி நின்றது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

உதகை நகராட்சி சார்பில், மார்க்கெட்டில் உள்ள மழைநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது. கால்வாய் மேல் இரும்பு தடுப்பை அகற்றி விட்டு தூய்மை பணியாளர்கள் கால்வாயில் படிந்திருந்த மண், சகதியை அகற்றி தூய்மைப்படுத்தினர். குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியை மேற்கொண்டனர். மழைநீர் வடிகால்கள் அடைப்பு ஏற்படாமல் மழைநீர் செல்ல,  வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News