உதகையில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
தேசியமாணவர் படை (என்.சி.சி.) சார்பில், தூய்மை பாரத இயக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, உதகை ரெயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்ததை கொண்டாடும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட தேசிய மாணவர் படை (என்.சி.சி.) சார்பில், தூய்மை பாரத இயக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, உதகை ரெயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, என்.சி.சி. கமாண்டர் கர்னல் சீனிவாசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் உதகை அரசு கலைக்கல்லூரி, அரசு பள்ளி என்.சி.சி. மாணவ-மாணவிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் என்.சி.சி. அலுவலர்கள் சுப்ரமணியன், விஜய், பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குனர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.