மத்திய அரசை கண்டித்து உதகையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்
பொது நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்று ஆர்ப்பாட்டம் மூலம் கோஷம் எழுப்பப்பட்டது.;
ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
நீலகிரி மண்டல அரசு போக்குவரத்து கழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஊட்டி நல வாரியங்களை சீர்குலைக்க கூடாது. பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் 4 சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.