குழந்தைகள் தினத்தையொட்டி உதகை அரசு பள்ளியில் குழந்தைகள் தின நிகழ்ச்சி
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்;
ஆண்டுதோறும் நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உதகை அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் கூறப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வகுப்புகள் வாரியாக மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.