உதகையில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

உதகையில் நடைபெற்ற விழாவில், தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2021-10-03 12:45 GMT

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊட்டி நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி,  மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊட்டி நகராட்சியில் பணிபுரிந்து வரும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை கையாளுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

முகாமில், தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி,  குப்பைகளை சேகரிப்பது, அப்புறப்படுத்துவது, உரமாக மாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என்று, நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் அறிவுறுத்தினார். ஊட்டி நகரில் குப்பைகளை அகற்றி தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்து வரும் பணியாளர்களின் தூய்மைப் பணியை கவுரவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்படுத்துவது குறித்த கண்காட்சி நடந்தது இதில் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News