உதகையில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 2 லட்சம் ரொக்கம் பறிமுதல்

உதகை நகரில் பல பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2022-02-07 16:32 GMT

வாகனச் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர். 

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உதகை-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை வேலிவியூ பகுதியில்,  இன்று பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். கேத்தியில் இருந்து உதகைக்கு வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கேத்தியை சேர்ந்த சிவக்குமார் ஆவணம் இன்றி ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News