குன்னூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற பணம் பறிமுதல்
நீலகிரி மாவட்டம் முழுவதும் மொத்தம் இதுவரை ரூ.3.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்தம் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணம் இன்றி பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது.
குன்னூரில் பறக்கும் படையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். டபுள் ரோடு பகுதியில், கோவையில் இருந்து உஷாராணி என்பவரது காரில், ஆவணம் இன்றி ரூ.1,80,000 எடுத்து வந்தார். ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற ஊட்டியில் ரூ.60,000, குன்னூரில் ரூ.1,80,000, கோத்தகிரியில் ரூ.ஒரு லட்சம் என மொத்தம் இதுவரை ரூ.3.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.