உதகையில் மாணவ, மாணவிகளுக்கான தொழில் நெறிவழிகாட்டி கண்காட்சி
கருத்தரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.;
ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், கல்லூரி மாணவ-மாணவிகள், படித்த இளைஞர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
கோவை மண்டல வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குனர் ஞானசேகரன் தலைமை தாங்கி தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியை தொடங்கி வைத்து கருத்துரை வழங்கினார். சுயதொழில் வாய்ப்புகள், வங்கிக் கடனுதவி திட்டங்கள், வங்கி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான அரசு சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ராணுவத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு தேவையான விவரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. தொழில்நெறி கண்காட்சி தொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கருத்தரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.