ஊட்டியில் கார் கண்ணாடி உடைத்து திருட்டு: ஒருவன் கைது
ஊட்டியில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து நடந்த திருட்டு சம்பவத்தில் திருச்சியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
ஊட்டி கமர்சியல் சாலை பார்க்கிங்கில் கார் நிறுத்தப்பட்டது. நேற்று, மதியம் கார் ஒன்றின் கண்ணாடியை மூன்று பேர் கொண்ட கும்பல் உடைப்பதை, மக்கள் பார்த்து அந்த கும்பலை பிடிக்க சென்றனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தப்பியோடிய கும்பவில் ஒருவரை மக்கள் விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர் . இருவர் தப்பியோடினர். சம்பவ பகுதிக்கு பி 1 இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு வந்து ஆய்வு செய்தார்.
இதில், திருச்சியை சேர்ந்த மூர்த்தி, என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஊட்டியில், நடந்த வேறு திருட்டு வழக்கில் தொடர்பு இருக்கிறதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவத்தால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், சமீப காலமாக ஊட்டியில் நடக்கும் திருட்டு சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.