சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் நோக்கில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது;
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி வெளியிட்ட தகவல்: விருது பெறுவோருக்கு ரூ.ஒரு லட்சம் விருது தொகை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதி உரை வழங்கப்படுகிறது. விருதாளர் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2021-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப் பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு சாதனைகள் ஆகிய தகுதி உடையவர்கள் தங்கள் விண்ணப்பத்தை நீலகிரி கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு வருகிற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது