உதகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் முகாம்
உதகையில் குழந்தைகளுக்கு உடல் எடை மற்றும் உயரம் கண்டறியப்பட்டு ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பிறந்த முதல் ஆறு வயது குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
மார்ச் 21ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் துவங்கி வைத்தார். பின்னர் குழந்தைகளுக்கு உடல் எடை மற்றும் உயரம் கண்டறியப்பட்டு ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் சத்தான உணவுப் பொருட்கள், இனிப்புகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 27 ஆயிரம் குழந்தைகளுக்கு உடல் எடை மற்றும் உயரம் பரிசோதனை 486 அங்கன்வாடி மையங்களில் இன்று முதல் மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெறும் என கூறினார்.
இந்த சிறப்பு முகாமில் குழந்தைகளின் வயதுக்கேற்ப எடை மற்றும் உயரம் கண்டறிந்து, எடை மற்றும் உயரம் குறைவான குழந்தைகளுக்கு குழந்தை நல மருத்துவர்கள் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.