உதகை ரசுக் கலைக்கல்லூரியில் ரத்ததான முகாம்: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

உதகை ரசுக் கலைக்கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Update: 2022-03-24 16:28 GMT

நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ்,ஊட்டி அரசு முகாமில் கல்லூரி மாணவ- மாணவிகள் சுமார் 50 பேர் ரத்ததானம் செய்தனர்.

உதகை ரசுக் கலைக்கல்லூரி கல்லூரியின் வைர விழாவை ஒட்டி ரெட்கிராஸ் சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கி பேசினார்.

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. வால்டர் ஐசக் தேவாரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தற்போதைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து உள்ளது. இந்த வளர்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பத்தை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

முகாமில் கல்லூரி மாணவ- மாணவிகள் சுமார் 50 பேர் ரத்ததானம் செய்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் வினிதா மற்றும் ரெட்கிராஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News