நீலகிரி கலெக்டரிடம் வீடு வேண்டி பார்வையற்ற தம்பதியினர் மனு

அரசு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் தங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க பார்வையற்ற தம்பதியினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.;

Update: 2022-03-21 13:40 GMT

உதகையில் பார்வையற்ற தம்பதியினர் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் உதகை அருகே உள்ள அதிகரட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சாந்தி, பெருமாள். பார்வையற்ற தம்பதியரான இவர்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் அரசு தரும் உதவி தொகை ஆயிரம் ரூபாயை வைத்து வாடகை கட்டி வந்துள்ளனர். இதனால் மிகுந்த வறுமையை சந்தித்து வருவதால் அரசு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் தங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போது வசித்துவரும் வீட்டிற்கு வாடகைத் தொகை செலுத்த முடியாமல் மிகுந்த வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதால் தமிழக முதல்வர் தங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Tags:    

Similar News