மதுவால் ஏற்படும் தீமைகள்: உதகையில் விழிப்புணர்வு பேரணி

பேரணியில் கலந்துக்கொண்ட கல்லூரி மாணவ மாணவியர், மது தீமைகள் குறித்த பதாதைகளை ஏந்திச் சென்றனர்.;

Update: 2022-03-23 10:45 GMT

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி, உதகையில்,  மாவட்ட ஆட்சியர் எஸ், பி அம்ரித் துவக்கி வைத்தார்.

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி ஆனது, உதகையில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக உதகை ரயில் நிலையத்தில் இருந்து இந்த விழிப்புணர்வு பேரணி இன்று துவங்கி நடைபெற்றது.

பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்பி அம்ரித்,  நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். நாட்டுப்புறக்கலையான பறை இசை முழங்கியபடி, முக்கிய வீதிகளில் மதுவிலக்கு பேரணி உலா வந்தது.  இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News