உதகை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
உதகை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், சைபர் மோசடி குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் உதகை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீசார் பேசும்போது, இளைஞர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு மற்றும் பரிசு பொருட்கள் கிடைத்தது என்று குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
ரகசிய குறியீடு எண்ணை கொண்டு பணத்தை பறித்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ரகசிய குறியீடு எண் மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடி செய்தால் பதற்றப்படாமல் 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைமை 1930 எண்ணை தொடர்புகொள்ளலாம்.
தங்கள் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்களின் வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்ட பணத்தை வெளியே எடுப்பது தடுக்கப்படும்.
மேலும் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.