உதகை அருகே ராஷ்ட்ரிய இந்து மகா அமைப்பினரின் விழிப்புணர்வு யாத்திரை
உதகை அருகே விழிப்புணர்வு யாத்திரையில் ஈடுபட்ட ராஷ்ட்ரிய இந்து மகா அமைப்பினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ராஷ்ட்ரிய இந்து மகா சபா சார்பில், இந்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்து விழிப்புணர்வு ராம ரத யாத்திரை உதகை அருகே தேனாடுகம்பை பகுதியில் நடைபெற்றது.
ராஷ்ட்ரிய இந்து மகா சபா தலைவர் வேலு தலைமை தாங்கினார். தேனாடுகம்பையில் தடையை மீறி இந்து விழிப்புணர்வு ராம ரத யாத்திரை செல்ல முயன்றனர்.
அப்போது அவர்கள் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அநீதி நடப்பதாகவும், கோவில்கள் இடிக்கப்பட்டு வருவதாகவும், மதமாற்றம் நடைபெறுவதாகவும் கோஷங்களை எழுப்பினர். போலீசார் தடையை மீறி யாத்திரை செல்ல முயன்ற ராஷ்ட்ரிய இந்து மகா சபா அமைப்பை சேர்ந்த 24 பேரை கைது செய்தனர்.
மேலும் ராம ரத யாத்திரைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.