உதகை ஆர்டிஓ அலுவலகத்தில் விழிப்புணர்வு ஓவியங்கள்
உதகை ஆர்டிஓ அலுவலக வளாகத்திலுள்ள சுவர்களில் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.;
ஆர்டிஓ அலுவலகத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்.
உதகை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் காணும் வகையில் சாலை விதிகளை மதிப்பது குறித்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் இருவர் தலைக்கவசம் அணிந்து செல்லுதல், பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லக்கூடாது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, சிறுவர் சிறுமியரை வாகனம் ஓட்ட அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட மேலும் பல வாசகங்கள் கொண்ட விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.