உயிர்ச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
உயிர்ச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் சார்பில் பசுமை பதாகையை வெளியிட அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.;
தேசிய பசுமை படை சார்பில், நீலகிரி மாவட்ட அளவில் தலைமை ஆசிரியர்களுக்கு நீலகிரி உயிர்ச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் கலந்துகொண்டு மண்ணை தொடுவோம், நீலகிரி உயிர்ச்சூழலை பாதுகாப்போம் என்ற பசுமை பதாகையை வெளியிட அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா நினைவாக இயற்கை விவசாயம் நம் வீட்டு தோட்டத்தில் ஏற்படுத்துவது, சூழல் பணிகளை வீட்டில் இருந்தே தொடங்குவோம் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தொடக்கக் கல்வி முதல் மேல்நிலை கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் செய்திருந்தார்.