உதகையில் கழுகுகளை பாதுகாக்க விழிப்புணர்வு பேழை திறப்பு
உதகை அரசு அருங்காட்சியகத்தில் அருளகம் அமைப்பு மூலம் கழுகுகளை பாதுகாக்க டிஜிட்டல் ஒலி பேழை திறந்து வைக்கப்பட்டது.
உதகை அரசு அருங்காட்சியகத்தில் அருளகம் அமைப்பு மூலம் கழுகுகளை பாதுகாக்க டிஜிட்டல் ஒலி பேழை திறந்து வைக்கப்பட்டது.
இதில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, ஜெர்மன் உள்பட 9 மொழிகளில் ஆடியோ பொருத்தப்பட்டு உள்ளது. இறந்த வன விலங்குகளை தின்று இருப்பதை பாதுகாத்து வரும் கழுகுகளை பெருக்க சுற்றுலாப் பயணிகள் உள்பட கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று முதல் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
இதில் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து ஆடியோ கேட்டு விழிப்புணர்வு அடையலாம். இந்தியாவில் வாழும் 9 வகையான கழுகுகளின் புகைப்படங்கள் அதில் இடம் பெற்று உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டும், ஆடியோவை கேட்டும் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர்.