காய்கறிகளுக்கான ஏல நேரம் மாற்றம்

புதிய ஊரடங்கு காரணமாக நாள்தோறும் உதகை மார்கெட் காய்கறிகளின் ஏலமண்டி நேரம் மாற்றப்பட்டுள்ளது.

Update: 2021-05-06 09:50 GMT

கொரோனா எதிரொலியாக இன்று புதிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் நீலகிரியில் விளையும் மலை காய்கறிகள் அதிகாலை 5 மணி முதலே உதகை மார்கெட் காய்கறி ஏல மண்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு முன்கூட்டியே ஏலம் நடை பெற்றது.

இன்று முதல் புதிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் காய்கறி கடைகள் மளிகைக் கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டம் உதகையில் மழை காய்கறிகளை ஏலம் விடும் வண்டிகள் அனைத்தும் அதிகாலை 5 மணிக்கே திறக்கப்பட்டன.

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை 7 மணிக்கு கொண்டு வந்தனர். எப்போதும் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் ஏலமானது இன்று முதல் அதிகாலை 6 மணிக்கு துவங்கி 8 மணி வரை நடைபெற்றது. குறிப்பாக மலை காய்கறிகள் மேட்டுப்பாளையத்துக்கு அதிகமாக கொண்டு செல்லும் நிலையில் இந்த ஊரடங்கு நேரம் காரணமாக மார்க்கெட் ஏல மண்டிகளுக்கு அதிகமான அளவில் கொண்டு வரப்பட்டது.

ஏலமண்டி உரிமையாளர்கள் கூறும்போது கொரோனா காரணமாக நேரக் கட்டுப்பாடுகள் அரசு விதித்துள்ள நிலையில் காய்கறிகளுக்கான ஏல நேரமும் மாற்றி அமைத்து அரசின் வழி நெறிமுறைகளை கடைப்பிடிப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News