3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு விபரம்

Update: 2021-04-07 11:15 GMT

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது.

நேற்று தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றத. இதில் நீலகிரி மாவட்டத்தின் மொத்த வாக்கு பதிவு சராசரியாக 69.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.இதில் உதகமண்டலம் (108) : 65.67%, வாக்குப்பதிவும்,கூடலூர் (தனி) (109) : 71.39%,குன்னூர் (110) : 69.79%. வாக்கு பதிவாகியுள்ளது.

இதில் ஊட்டி சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 205882 ஆகும் இதில் ஆண் வாக்காளர்கள் 98690 , பெண் வாக்காளர்கள் 107186, 3 ம் பாலினத்தவர் 6 பேரும் உள்ளனர்.ஊட்டி சட்டமன்றத் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவில் 139626 பேர் வாக்களித்துள்ளனர் இதில் ஆண்கள் 69232 பேரும் 70393 பெண்களும் வாக்களித்துள்ளனர் 65. 67% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதே போல் கூடலூர் தனி தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 189155 ஆகும் இதில் ஆண் வாக்காளர்கள் 92366 ம் 96789 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவில் 136496 பேர் வாக்களித்துள்ளனர். இதில் ஆண்கள் 67398 பேரும் 69098 பெண்களும் வாக்களித்துள்ளனர்ங. இது 71.39% சதவீத வாக்குகள் ஆகும்.

இதில் மொத்தம் 133932 வாக்குகள் பதிவாகின. இதில் ஆண்கள் 65863 பேரும் 68068 பேர் பெண்களும் 3ம் பாலினத்தவர் 1 நபர் வாக்களித்துள்ளனர் மொத்த வாக்குப்பதிவு 69.79% ஆகும்.நீலகிரியில் 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 69.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags:    

Similar News