நீலகிரி எஸ்.பி.யாக ஆஷிஸ் ராவத் பொறுப்பேற்பு
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆஷிஸ் ராவத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.;
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாண்டியராஜன் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 7-வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து புதுடெல்லியில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவில் 8-வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக பணிபுரிந்து வந்த ஆஷிஸ் ராவத், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று நீலகிரி காவல் கண்காணிப்பாளராக ஆஷிஸ் ராவத் ஊட்டியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இதனை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் கோப்புகளில் கையெழுத்திட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜனார்த்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.