உதகையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை

உதகையிலுள்ள பேரூராட்சி அலுவலகத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.80,000 சிக்கியது.

Update: 2021-10-14 05:15 GMT

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய அலுவலகம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களுக்கான கூட்டம் உதகை பிங்கர்போஸ்ட்டில் கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவி இயக்குனருக்கு பணம் கொடுக்க உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி மற்றும் போலீசார் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று திடீரென சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி இயக்குனர், செயல் அலுவலர்களிடம் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் 7 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 190 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், 5 பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஒரு இளநிலைப் பொறியாளர் ஆகிய 7 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த சோதனை 3 மணி நேரத்திற்கும் மேலாக  நடந்தது.

Tags:    

Similar News