கல்வி உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் உயர்த்தி அறிவிப்பு
மேலும் தகவலுக்கு 044-29515942 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.
2021-2022 ம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை (எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்.சி., எம்.பில்., எம்.பி.ஏ., பி.எச்.டி.), பாலிடெக்னிக், தொழிற்படிப்பு (மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., கால்நடை மருத்துவம், சித்த மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம்) போன்ற படிப்புகள் பயிலும் மாணவர்கள் புதிய விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க பெற்றோரது ஆண்டு வருமானம் உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் அல்லது 044-29515942 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.