உதகையில் அனைத்து வங்கி பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் உதகை ஏடிசி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை காலதாமதமின்றி நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் உதகை ஏ.டி.சி. திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களை தனித்தனியாக பேக்கிங் செய்து வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்து பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.