நீலகிரியில் அனைத்து வங்கி வணிக தொடர்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நிரந்தர அடிப்படை ஊதியம், மருத்துவ காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி செய்து தர வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.;
தமிழ்நாடு அனைத்து வங்கி வணிக தொடர்பாளர்கள் சங்கம் சார்பில் உதகை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் நீலகிரி மாவட்டத்தில் கிராமங்களில் வங்கி சேவைகள் தொய்வின்றி வழங்கவும், முதியோர் உதவித்தொகை, புதிய கணக்கு தொடங்கவும் வணிக தொடர்பாளர்களாக பணிபுரிகிறோம்.
ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி அடிப்படை ஊதியம் மாதம் ரூ.5,000 வழங்கப்பட்டு வந்தது. தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதால் மிக குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. தற்போது இன்டர்நெட் பயன்படுத்தும் செலவுக்கு வழங்கிய தொகை முற்றிலும் மறுக்கப்பட்டு உள்ளது.
தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வங்கிக்கு கொடுக்கப்பட்டு முதியோர் உதவித்தொகை கமிஷன் ரூ.30 கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். வங்கிகளில் செலவினங்களை குறைக்கும் விதமாக எங்களுக்கு அடிப்படை ஊதியம் கிடைப்பதில்லை.
அனைத்து வங்கி வணிக தொடர்பாளர்களுக்கும் நிரந்தர அடிப்படை ஊதியம், மருத்துவ காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.