மது போதையில் சோலார் மின் இணைப்பு மீது தவறி விழுந்த நபர் பலி
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
உதகை மேல் கோடப்பமந்து பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 53), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மதுபோதையில் விவசாய விளைநிலம் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றபோது தவறி சோலார் வேலி மீது விழுந்தார். அவர் மது போதையில் இருந்ததால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உதகை நகர போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவராமன் தவறி விழுந்து இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.