உதகையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.;
அதிமுக., இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மீது நேற்று தாக்குதல் நடத்த முயற்சி செய்ததை கண்டித்து நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி தலைமையில் ஊட்டி காபி ஹவுஸ் அருகே 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாக்குதல் முயற்சி செய்த அமமுக-வை சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.