உதகையில் அதிமுக 50ம் ஆண்டு கொண்டாட்டம்
அதிமுகவின் 50 ம் ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் வகையில் உதகையில் அதிமுகவினர் கொடி ஏற்றி கொண்டாட்டம்.
அதிமுகவின் 50 ஆண்டுகால கொண்டாட்டத்தை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்பு கொடி ஏற்றியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத், மாவட்ட கழக துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.