உதகையில் வேட்புமனு பரீசீலனையில் அ.தி.மு.க. வேட்பாளர் மனு நிராகரிப்பு
உதகையில் வேட்புமனு பரீசீலனையில் அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.;
உதகை நகராட்சி தேர்தலில் 24-வது வார்டு மற்றும் 11-வது வார்டுகளில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மற்றும் இரண்டாம் வார்டில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த உஷாராணி ஆகிய 3 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
11-வது வார்டில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஜெனிபர் மற்றும் 24-வது வார்டில் ஜாஸ்மின் மனு தாக்கலில் டெபாசிட் தொகையை இரண்டாயிரத்திற்கு பதிலாக ஆயிரம் ரூபாய் என்று குறைவாக கட்டியதால் இருவரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. உஷா ராணியின் முன் மாெழிபவர் வேறு வார்டில் இருந்து முன்மொழிந்ததால் அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.