தாெடர் மழையால் உதகை, கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
பரலாக பெய்து வரும் மழையின் காரணமாக உதகை கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாக உதகை-கோத்தகிரி சாலை மைனலா பகுதியில் ஒரே இடத்தில் 5 மரங்கள் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது.
இதனால் அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உதகை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு பகுதியில் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரங்கள் அகற்றப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, முழுமையாக மரங்கள், கிளை வெட்டி அகற்றப்பட்டன. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.