உதகை அரசு கல்லூரியில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
வேலைவாய்ப்பு முகாமில் 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன
உதகை அரசு கலைக்கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில், ஏழு நாள் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கல்லூரியில் நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டன.
முகாமில் உதகை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது கல்வி சான்றிதழ்களை காண்பித்தனர். நேர்காணலில் பங்கேற்றனர். அவர்கள் தனியார் நிறுவனங்களிடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். தொடர்ந்து அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வேலைவாய்ப்பு முகாமில் 120 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் வேலைவாய்ப்பு அலுவலர் முனைவர் பாலசுப்ரமணியம், துறை பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.