உதகை அருகே கேரட் லோடு ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானது

உதகை அருகே லாரி கவிழ்ந்து விபத்து, 12 தொழிலாளர்கள் காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.;

Update: 2021-07-20 10:02 GMT

உதகை அருகே லாரி கவிழ்ந்து விபத்து, 12 தொழிலாளர்கள் காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  உதகை அருகே பெம்பட்டியில் அறுவடைக்கு தயாரான கேரட்களை மூட்டைகளில் லாரியில் ஏற்றி கழுவி சுத்தம் செய்வதற்காக அப்புகோடு பகுதிக்கு கொண்டு வரும் போது, எல்லக் கண்டி பகுதியில் நிலை தடுமாறி லாரி சாலையில் கவிழ்ந்தது.

இதில் லாரியின் மேல் அமர்ந்து வந்த பெண் தொழிலாளர்கள் 7 பேர் உட்பட 12 பேர் மீது மூட்டை சரிந்து விழுந்து காயமடைந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனரக வாகனங்களில் ஆட்களை அதிகமாக ஏற்றிச் செல்வோர் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்போது மட்டுமே இதுபோன்ற விபத்துக்கள் நடக்காது என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News