உதகையில் 73 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
குடியரசு தின விழா கொரோனா நோய் தடுப்பு வழி நெறிமுறைகளுக்காக எளிமையாக நடந்தது.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 73 வது குடியரசு தின விழா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸிஷ் ராவத் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற்ற விழாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை, வருவாய்துறை, காவல்துறை, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 94 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெயராமன், மத நல்லிணக்க குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். எப்போதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் குடியரசு தின விழா நோய் தடுப்பு வழி நெறிமுறைகளுக்காக எளிமையாக நடந்தது.