உதகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: போலீசார் விசாரணை

4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துக்கு தொழிலில் நஷ்டமா? கடன் பிரச்னை காரணமா? எனபலகோணங்களில் போலீஸார் விசாரிக்கின்றனர்

Update: 2021-08-09 17:58 GMT

உதகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்த சம்பவம்  பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உதகை அருகே புதுமந்து பகுதியை சேர்ந்த சந்திரன் (40), கீதா (39) தம்பதியினர், இந்தப் பகுதியில் தோட்டத்தை ஒப்பந்த முறையில் எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளனர் .

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அருகில் இருந்தவர்கள் சென்று பார்க்கும் பொழுது, சந்திரன், கீதா ஆகிய இருவரும் தூக்கில் தொங்கிய நிலையிலும், ரக்ஷிதா (16) விஷ்வா (11) இரு குழந்தைகள், தரையில் இறந்து கிடந்த நிலையிலும் இருந்துள்ளனர்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் உதகை புதுமந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு வந்து உடல்களை கைப்பற்றி உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து, போலீசார் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே, தொழிலில் நஷ்டமா அல்லது கடன் பிரச்னையா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News