உதகையில் போதை பொருள் விற்பனை: 3 பேர் கைது
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி டவுன் டிஎஸ்பி தலைமையில் நடந்த சோதனையில் போதை பொருட்கள் சிக்கியது.
உதகை நகரில் போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவுப்படி டவுன் டிஎஸ்பி மகேஸ்வரன் , தலைமையில் உதகை நகரிலுள்ள மெயின் பஜார், கமர்சியல் சாலை, பிங்கர் போஸ்ட், உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் உதகை எல்க்ஹில் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், சேகர், உதகை அருகே உள்ள கப்பத்தொரை பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஜீஸ் ஆகியோர் போதைப் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து வீட்டில் பதுக்கி நகரில் உள்ள பல கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இவர்களிடமிருந்து 100 கிலோ போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கோவையைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு உடையதால் போலீஸார் கோவைக்கு விரைந்துள்ளனர்.