உதகை அருகே நிலத்தில் கஞ்சா வளர்த்த 3 பேர் கைது: செடிகள் பறிமுதல்

உதகை அருகே பட்டா நிலத்தில் கஞ்சா பயிரிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து செடிகளை பிடுங்கி பறிமுதல் செய்தனர்.

Update: 2021-11-11 15:38 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டம், கல்லட்டியில் இருந்து உதகையை நோக்கி இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் தலைகுந்தா சோதனைச்சாவடியில் வந்து கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கல்லட்டியில் பயிரிட்ட கஞ்சா செடிகளை பறித்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை பிடித்து கல்லட்டி 6-வது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு சென்றனர்.

அங்கு கல்லட்டியை சேர்ந்த விவசாயியான குணசேகரன் (வயது 56) தனது பட்டா நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்தது தெரியவந்தது. போலீசார் கஞ்சா செடிகளை பிடுங்கி பறிமுதல் செய்தனர்.

புதுமந்து போலீசார் குணசேகரன், உதகை அருகே தாவணெ கிராமத்தை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவன், கூடலூரை சேர்ந்த விஷ்ணு (19) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

குணசேகரன், விஷ்ணு ஆகிய 2 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

Tags:    

Similar News