நீலகிரி: 4 நகராட்சிகள் 11 பேரூராட்சிகளில் விறுவிறு -501 பேர் வேட்பு மனு தாக்கல்

நீலகிரி மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகளில் மொத்தம் 272 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

Update: 2022-02-03 16:57 GMT

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. நேற்று வரை 102 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இன்று உதகை நகராட்சியில் 127 பேர், குன்னூர் நகராட்சியில் 67 பேர், கூடலூர் நகராட்சியில் 63 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 15 பேர் 4 நகராட்சிகளில் மொத்தம் 272 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

அதிகரட்டி பேரூராட்சியில் 19 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 5 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 49 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 10 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 15 பேர், கேத்தி பேரூராட்சியில் 19 பேர், கீழ்குந்தா பேரூராட்சியில் 6 பேர், கோத்தகிரி பேரூராட்சியில் 38 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 23 பேர், ஓவேலி பேரூராட்சியில் 37 பேர், சோலூர் பேரூராட்சியில் 8 பேர் 11 பேரூராட்சிகளில் 229 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று மட்டும்  501 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 603 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

Tags:    

Similar News