நீலகிரி மாவட்டத்தில் தயார் நிலையில் 219 பள்ளிகள்; தூய்மை பணிகள் மும்முரம்

செப் - 1 முதல் பள்ளிகளை திறக்க அரசு அறிவித்துள்ள நிலையில் நீலகிரியில் 219 பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.

Update: 2021-08-31 12:23 GMT

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு நாளை முதல் பள்ளி கல்லூரிகளை திறக்க அனுமதித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளை தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் திறக்காமல் உள்ளன. இந்நிலையில் பல்வேறு தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள் திறக்க செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 , 10, 11, 12 வகுப்புகளுக்கான பள்ளி கல்லூரிகள் திறக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், அரசு அறிவுறுத்தியுள்ள வழி நெறிமுறைகளின்படி மாணவ, மாணவிகள்  வருகை புரிவதால் தூய்மைப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மலை மாவட்டமான நீலகிரியில் 9, 10,11, 12 ம் வகுப்புகள் உள்ள 219 பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் நீலகிரியில் உள்ள 219 பள்ளிகளில் 4 ஆயிரத்து 391 ஆசிரியர்களும் பணி செய்ய உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளில் பயிலும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நாளை பள்ளிக்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான அறிவிப்பு வந்தவுடன் பெற்றோர்கள் அவரவர் பிள்ளைகளை பள்ளி கல்லூரிக்கு முழுமனதுடன் அச்சமில்லாமல் அனுப்ப வேண்டுமென கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News